முதல்முறையாக சுதேசி செயற்கைகோள் வழிகாட்டி அமைப்பு மூலமாக பயணித்த இந்திய விமானம் !!

  • Tamil Defense
  • April 30, 2022
  • Comments Off on முதல்முறையாக சுதேசி செயற்கைகோள் வழிகாட்டி அமைப்பு மூலமாக பயணித்த இந்திய விமானம் !!

இண்டிகோ விமான நிறுவனம் (Indigo Airlines) இந்திய விமானநிலையங்கள் ஆணையம் Airports Authority of India ஆகியவை இணைந்து முதல்முறையாக சுதேசி செயற்கைகோள் வழிகாட்டி அமைப்பு மூலமாக விமானத்தை இயக்கி உள்ளனர்.

GAGAN – GPS aided Geo Augmented Navigation எனப்படும் அந்த SBAS – Satellite Based Augmentation System மூலமாக இயங்கிய விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர் விமான நிலையத்தில் தரை இறங்கியது, ஆசிய பசிஃபிக் பகுதியில் உள்நாட்டு செயற்கைகோள் வழிகாட்டி அமைப்பை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ககன் GAGAN – GPS Aided Geo Augmented Navigation தொழில்நுட்பமானது Airports Authority of India மற்றும் ISRO – Indian Space Reaserch Organisation ஆகியவை இணைந்து உருவாக்கியதாகும் மேலும் இந்த சோதனையை விமானத்தில் இருந்த DGCA – Directorate General of Civil Aviation சிவில் ஏவியேஷன் இயக்குனரக அதிகாரிகள் கண்காணித்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.