இந்தியாவின் புதிய தொலைதூர நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் !!

  • Tamil Defense
  • April 28, 2022
  • Comments Off on இந்தியாவின் புதிய தொலைதூர நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் !!

ஏற்கனவே இந்திய தரைப்படையில் DRDO தயாரித்த சுதேசி பல்குழல் ராக்கெட் வீச்சு அமைப்பான PINAKA சேவையில் உள்ளதை நாம் அறிவோம்.

தற்போது அந்த PINAKA பினாகா ராக்கெட்டுகளை அடிப்படையாக கொண்டு இந்திய கடற்படைக்காக ARDE – Armament Research & Development Eastablishment மற்றும் HEMRL – High Energy Research Materials Laboratory ஆகியவை இணைந்து ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டை உருவாக்கி உள்ளன.

விரைவில் L & T – LARSEN & TOUBRO நிறுவனம் இந்த ராக்கெட்டுகளை ஏவக்கூடிய லாஞ்சர் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதில் இந்த ராக்கெட்டுகளை இணைக்க உள்ளது இந்த ராக்கெட்டுகள் 8.5 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை ஆகும்.

தற்போது ARDE இந்த ராக்கெட்டுகளின் திறன்களை சோதனைகளை நடத்தி இந்திய கடற்படைக்கு நிருபித்த நிலையில் இந்திய கடற்படையின் தகுதிகளை இது எட்டியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆகவே விரைவில் இது படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கடற்படை தற்போது பயன்படுத்தி வரும் RGB-60 ரக நீர்மூழ்கி ராக்கெட் எதிர்ப்பு அமைப்புகள் 5.3 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை ஆகும் இவற்றை RBU-6000 லாஞ்சர்கள் மூலமாக தான் ஏவ முடியும் என்பதும் இவற்றை இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்களில் காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்கள் ஆகும்.