இந்தியாவின் வருங்கால டாங்கி வடிவமைப்பில் பங்காற்ற உள்ள உக்ரைன் போர் படிப்பினைகள் !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on இந்தியாவின் வருங்கால டாங்கி வடிவமைப்பில் பங்காற்ற உள்ள உக்ரைன் போர் படிப்பினைகள் !!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் டாங்கிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் சின்னாபின்னமாக அழிக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக தற்போதைய நவீன கால போர்முறையில் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் வரவு டாங்கி போர் முறையையே அடியோடு புரட்டி போட்டுள்ளது என்றால் மிகையல்ல.

தற்போது இந்தியா இந்த போரில் டாங்கி மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களால் கிடைத்த படிப்பினைகளை கொண்டு தனது எதிர்கால டாங்கியை வடிவமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களின் திறனை மிஞ்சும் அதிநவீன டாங்கிகளை வடிவமைக்கும் பணிகளை இன்னும் சில ஆண்டுகளில் துவங்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.