இந்திய கடற்படையின் நீண்ட நாள் தேவைகளில் ஒன்றான கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை (NUH – NAVAL UTILITY HELICOPTER) வாங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
அதன்படி தற்போது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படைக்கென மாற்றியமைக்கப்பட்ட ALH- ADVANCED LIGHT HELICOPTER மற்றும் LUH- LIGHT UTILITY HELICOPTER ஆகியவற்றை வாங்க உள்ளனர்.
முன்னர் NUH திட்டத்தின் கீழாக சுமார் 111 ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு அமைச்சகம் மூன்றாவது இறக்குமதி தடை பட்டியலில் சேர்த்து உத்தரவு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து இந்திய கடற்படை ,ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 60 ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.