1 min read
ஆஸ்திரேலியாவில் இந்திய கடற்படை விமானங்கள் !!
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கடற்படையின் BOEING P8I NEPTUNE ரக தொலைதூர கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் கூட்டு பயிற்சிக்காக சென்றுள்ளன.
நமது தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணம் கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த வகை விமானங்கள் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள தளத்தை சென்று சேர்ந்தன.
இந்திய கடற்படையின் 312ஆவது படையணியை சேர்ந்த இந்த விமானங்கள் ஆஸ்திரேலிய விமானப்படையின் 92ஆவது படையணியுடன் இணைந்து பல்வேறு கடல்சார் கூட்டு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளன.
ஏற்கனவே இரு நாடுகளை சேர்ந்த BOEING P8I POSEIDON ரக விமானங்கள் AUSINDEX மற்றும் MALABAR ஆகிய கூட்டு ராணுவ பயிற்சிகளில் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.