
இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
1) திறன்கள் – அதாவது இந்தியா தனது திறன்களை ஒவ்வொரு துறையிலும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் அதிகரித்து கொள்ள வேண்டும்.
2) எந்த விளைவையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள பழகி கொள்ள அல்லது தன்னை தானே தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
3) சர்வதேச நிலவரத்தை எப்படியெல்லாம் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது என்பதை பற்றிய நடைமுறை சிந்தனை அவசியமாகிறது.