
இந்திய தனியார் நிறுவனமான PIXXEL அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கின் SPACEX நிறுவனத்துடன் இணைந்து ஷகுந்தலா எனும் செயற்கைகோளை விண்ணில் ஏவி உள்ளது.
இந்த ஷகுந்தலா செயற்கைகோளானது மிகவும் சக்திவாய்ந்த அதிக திறன் கொண்ட Hyperspectral கேமிரா ஒன்றை கொண்டுள்ளது இதன்மூலம் திறமையாக பூமியை கண்காணிக்க முடியும்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் கேப் கனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து SPACEX நிறுவனத்தின் ட்ரான்ஸ்போட்டர்-4 ராக்கெட் மூலமாக இது விண்ணில் ஏவப்பட்டது.
15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் காடுகள் அழிப்பு, இயற்கை எரிவாயு கசிவு, பனிப்பாறைகள் உருகுவது, மாசு போன்ற நிகழ்வுகளை கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.