
இந்திய கடலோர காவல்படை ICGS URJA PRAVAHA உர்ஜா ப்ரவாஹா எனும் புதிய ரோந்து கப்பலை குஜராத் மாநிலம் பாரூச் நகரில் வைத்து இணைத்துள்ளது.
தற்போது இந்த ரோந்து கப்பலானது கேரளா மற்றும் மற்றும் மாஹே ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்திய கடலோர காவல்படையின் நான்காவது மாவட்ட பகுதியின் கீழ் கொச்சி தளத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த ரோந்து கப்பல் மூலமாக கேரளா, மாஹே மற்றும் லட்டசத்தீவு ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அடங்கிய பகுதிகளை கண்காணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.