
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துகாட்டாக சமீபத்தில் காஷ்மீரில் மாற்றுமதங்களை சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரிகள் நமாஸ் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
15ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி பாண்டே, ஒரு சீக்கிய அதிகாரி மற்றும் ராணுவ வீரர்கள் ரமலானை முன்னிட்டு மக்களுடன் சேர்ந்து நமாஸ் செய்தனர்.
இது தற்போது ட்விட்டரில் மிகவும் வைரலாகி வருகிறது பல ட்விட்டர் பயனர்கள் இந்த செயலை பாராட்டி மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டும் கூட ரமலானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரீ – JAMMU KASHMIR LIGHT INFANTRY REGIMENTAL CENTREல் நடைபெற்ற தொழுகையில் வீரர்களுடன் லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி பாண்டே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.