
மத்திய உள்துறை அமைச்சகம் முதல்முறையாக மத்திய ரிசர்வ் காவல்படையில் இரு ராணுவ அதிகாரியை பணியமர்த்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்திய தரைப்படையின் பொறியியல் பிரிவை சேர்ந்த லெஃப்டினன்ட் கர்னல் வினீத் குமார் திவாரி மத்திய ரிசர்வ் காவல்படையில் பொறியியல் பிரிவில் கமாண்டன்ட் அந்தஸ்தில் பணியாற்ற உள்ளார்.
அதாவது மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியில் இணையும் நாள் முதலாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் பணியாற்றுவார் இந்த காலகட்டத்தில் அவர் மத்திய ரிசர்வ் காவல்படை விதிகளுக்கு கட்டுபட்டு செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒருபுறம் எதிர்ப்பும் மறுபுறம் வரவேற்பும் ஒரு சேர எழுந்துள்ளது ஏற்கனவே IPS அதிகாரிகள் மத்திய ஆயுத காவல்படைகளில் கோலோச்சி வரும் நிலையில் தற்போது ராணுவ அதிகாரிகளின் ஆதிக்கமும் அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனால் ஒரு சாரார் இதன் காரணமாக துணை ராணுவ படைகளை சேர்ந்த அதிகாரிகளும் எதிர்காலத்தில் இப்படி ராணுவத்தில் பணியில் இணையும் வாய்ப்புகள் உருவாகலாம் என கருதுகின்றனர்.