எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மேம்படுத்தப்படும் கொச்சி கப்பல் கட்டுமான தளம் !!

சமீபத்தில் INS VIKRANT ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் பற்றிய ஊடக சந்திப்பில் பேசிய கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் மூத்த அதிகாரி பிஜோய் பாஸ்கர் கப்பல் கட்டுமான தளம் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதாவது ஒரு புதிய கப்பல் கட்டும் DRY DOCK கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் இது Suezmax அளவிலான அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 2 லட்சம் டன்கள் வரையிலான எடையை சுமக்கும் எண்ணெய் கப்பல்கள்,

சுமார் 70,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்கள், Jack-up Rig, LNG திரவ வடிவிலான இயற்கை எரிவாயு கபபல்கள் ஆகியவற்றை கட்டும் அளவுக்கு பெரிதாக இருக்கும் எனவும் இதில் ஒரு 600 டன் Gantry crane இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 6000 டன்கள் எடையிலான Ship lift system, 6 பணிமனைகள், 1500மீட்டர் Outfitting berth ஆகியவற்றை கொண்ட ஒரு சர்வதேச கப்பல் பராமரிப்பு மையம் ஒன்று கட்டமைக்கப்படும் எனவும் விரைவில் சொகுசு கப்பல்களை பெருமளவில் கட்டமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சந்தை நிலவரப்படி இந்திய கப்பல் கட்டுமான சந்தையில் சுமார் 40 சதவிகிதம் கொச்சி கப்பல் கட்டுமான தளம் வசம் இருப்பதாகவும் நார்வே, நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் UAE ஆகிய நாடுகளுக்கு 47 கப்பல்களை ஏற்றுமதி செய்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.