இடைத்தர கடல்சார் என்ஜின்களை தயாரிக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • April 8, 2022
  • Comments Off on இடைத்தர கடல்சார் என்ஜின்களை தயாரிக்கும் இந்தியா !!

இடைத்தர வேகத்தில் இயங்கும் கடல்சார் என்ஜின்களை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்க இந்திய அரசு டென்டர் விட்டுள்ளது.

இதன்மூலம் இந்திய ஆயுதப்படைகளுக்கான தேவைகளை சந்திக்கவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா எண்ணுகிறது.

மேக்-1 பிரிவில் வரும் இந்த திட்டத்திற்கு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பு கொண்ட விதிகளின்படி அரசு படிப்படியாக சுமார் 90% சதவிகிதம் நிதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடுத்தர வேக என்ஜின்கள் 300-900 RPM வேகம் கொண்டவை ஆகும். உதவி கலன்கள், டக் போட் போன்றவற்றில் இவற்றை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.