மொரிஷியஸ் நாட்டிற்கு ஹெலிகாப்டர் டெலிவரி செய்த இந்தியா !!

  • Tamil Defense
  • April 2, 2022
  • Comments Off on மொரிஷியஸ் நாட்டிற்கு ஹெலிகாப்டர் டெலிவரி செய்த இந்தியா !!

மொரிஷியஸ் நாடு சமீபத்தில் இந்தியாவிடம் குத்தகை அடிப்படையில் ஹெலிகாப்டர் ஒன்றை பெற ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதனையடுத்து இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட HAL DHRUV MK-3 கடல்சார் கண்காணிப்பு ஹெலிகாப்டர் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்தது.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இந்திய விமானப்படையின் C-17 ரக விமானம் மூலமாக மொரிஷியஸ் நாட்டிற்கு இந்தியா அனுப்பி வைத்தது.

இந்த ஹெலிகாப்டர் மொரிஷியஸ் காவல்துறையால் பயன்படுத்தி கொள்ளப்படும் ஏற்கனவே அந்நாடு HAL MK3 மற்றும் Do-228 ரக வானூர்திகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.