இந்தியாவின் முதலாவது கூட்டு படைகள் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் பல ராணுவ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்பதை அறிவோம்.
இதையடுத்து CDS எனும் கூட்டுபடைகள் தலைமை தளபதி பதவி காலியாக இருந்த நிலையில் அந்த இடத்தை நிரப்ப தீவிரமாக ஆனால் நிதானமாக அரசு முயற்சிகள் எடுத்தது.
இந்த நிலையில் தற்போது ஒய்வு பெற்ற மற்றும் பணியாற்றி வரும் ராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் புதிய தரைப்படை தலைமை தளபதியாக இதுவரை துணை தளபதியாக இருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போதைய தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே CDS பொறுப்பை ஏற்கலாம் என உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தரைப்படை தளபதியாக பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் அதற்கு முன்னர் அல்லது விரைவில் CDS நியமனம் பற்றிய தகவல் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.