இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள Anti-Tank Guided Missile அதாவது டேங்க் எதிர்ப்பு ஏவுகணை தான் ‘HELINA’ ஆகும். பயன்பாட்டாளர் சோதனையாக தற்போது தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில் தற்போது கடந்த ஏப்ரல் 12,2022 அன்று ALH வானூர்தியில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்திய விமானப் படை, இராணுவம் மற்றும் DRDO ஆகியவை இணைந்து இந்த ஏவுகணையை அதிஉயர் பகுதியில் சோதனை செய்துள்ளன.இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
வெவ்வேறு தூரம் மற்றும் உயரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் ஏவுகணை இலக்கை மிகச் சரியாக தாக்கியழித்தது குறிப்பிடத்தக்கது.ஏவுகணையினுடைய அனைத்து அமைப்புகளின் நிலையும் சோதிக்கப்பட்டது.
இதற்கு முன் இராஜஸ்தானின் பொக்ரானிலும் சோதனை செய்யப்பட்டது.ஹெலினா மூன்றாம் தலைமுறை fire and forget Anti-Tank Guided Missile ஆகும்.இதை இரவு பகல் என அனைத்து காலநிலைகளிலும் எந்தவிதமான கவச வாகனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம்.