உள்நாட்டு ஹெலிகாப்டர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து !!

  • Tamil Defense
  • April 17, 2022
  • Comments Off on உள்நாட்டு ஹெலிகாப்டர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து !!

இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடம் இருந்து சுமார் 48 Mi-17V5 ரக ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மேக் இன் இந்தியா திட்டதிற்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ரஷ்ய ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பு நடுத்தர ஹெலிகாப்டர்களை (IMRH – INDIAN MULTI ROLE HELICOPTER) இந்திய விமானப்படை ஆதரிக்கும்.

மேற்குறிப்பிட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையின் முக்கியமான வானூர்திகளில ஒன்றாகும் இவற்றை ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட VVIPகள் பயணிப்பது முதல் படைகளை நகர்த்துவது வரையிலான அனைத்து பணிகளிலும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது சிறப்பாகும்.