ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை பல பகுதிகளில் விலக்க மத்திய அரசு முடிவு !!
மத்திய அரசு அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து AFSPA சட்டத்தை விலக்க முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை இந்த மாநிலங்களில் தலை விரித்தாடிய நிலையில் அவற்றை ஒடுக்க இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தை பல தரப்பினரும் முற்றிலுமாக எதிர்த்து போராடினர், மேலும் சிலர் அமைதி நிலைநாட்டப்பட்ட இடங்களில் இருந்து இந்த சட்டத்தை விலக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
ராணுவ அதிகாரிகளும் தேவையற்ற பகுதிகளில் இருந்து இந்த சட்டத்தை விலக்கி மாநில காவல்துறைகளிடம் ஒப்படைக்கவும் அதிகபட்சமாக துணை ராணுவ படைகளை களமிறக்கினால் போதும் எனவும்,
அத்தகைய சூழலில் பின்விலக்கப்பட்ட படைகளை நாட்டின் இரு எல்லையோர பகுதிகளிலும் காவல் பணியில் ஈடுபடுத்தலாம் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
தற்போது மத்திய அரசின் இந்த முடிவால் பல்வேறு தரப்பினரும் குறிப்பாக அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.