ரஷ்ய ஆயுதங்களுக்கான மாற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது அமெரிக்காவிடம் தெரிவித்த இந்தியா !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on ரஷ்ய ஆயுதங்களுக்கான மாற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது அமெரிக்காவிடம் தெரிவித்த இந்தியா !!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி ஊடகவியலாளர்களிடம் பேசிய போது ரஷ்ய ஆயுதங்களை வாங்குவது இந்திய நலன்களுக்கு எதிரானது என கூறினார்.

கடந்த மாதம் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் விக்டோரியா நியூலான்ட் பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளை எதிர்கொள்ள அதிநவீன ஆயுதங்களை பெற அமெரிக்கா இந்தியாவுக்கு உதவ தயார் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய தரப்பு அதற்கு பதிலாக ரஷ்ய ஆயுதங்களுக்கான மாற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும், ரஷ்ய நிறுவனங்கள் கூட்டு தயாரிப்பு முறையில் அதிக ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்குலக நாடுகளின் நிறுவனங்கள் இத்தகைய கூட்டு தயாரிப்போ அல்லது ஏதேனும் ஒத்துழைப்புக்கோ எளிதில் சம்மதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது.