ரஷ்யாவிடம் இல்லாத திறனை கொண்டிருக்கும் இந்தியா என்ன அது ??

  • Tamil Defense
  • April 24, 2022
  • Comments Off on ரஷ்யாவிடம் இல்லாத திறனை கொண்டிருக்கும் இந்தியா என்ன அது ??

சமீபத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த ஏவுகணை உலகின் பல நாடுதளிடம் இல்லாத திறன்களை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அளிக்கிறது ஏன் இதனை இணைந்து தயாரித்த ரஷ்யாவிடம் கூட இல்லாத சில திறன்களை நமக்கு இந்த ஏவுகணை அளித்துள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால் ஒரே க்ரூஸ் ஏவுகணை நிலம் ஆகாயம் மற்றும் கடலில் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் என அனைத்து விதமாகவும் செலுத்தப்பட முடியும் திறன் வேறேந்த நாட்டிடமும் இல்லை இதனால் நமது திறன்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்கள், நீர்மூழ்கிகள், இந்திய விமானப்படையின் சுகோய்-30 மற்றும் இலகுரக தேஜாஸ் ஆகிய போர் விமானங்களிலும் இருந்து கூட ஏவ முடியும்.

உலகிலேயே இத்தகைய க்ரூஸ் ஏவுகணையை சுகோய்-30 போன்ற மிகப்பெரிய கனரக போர் விமானத்திலும் அதே நேரத்தில் இதன் இலகுரக வடிவத்தை தேஜாஸ் போன்ற மிகச்சிறிய இலகுரக போர் விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ளும் திறன் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது என்பது சிறப்பாகும்.