உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பட்ஜெட் இந்தியாவுடையது சிப்ரி ஆய்வறிக்கை !!

  • Tamil Defense
  • April 26, 2022
  • Comments Off on உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பட்ஜெட் இந்தியாவுடையது சிப்ரி ஆய்வறிக்கை !!

இந்தியா கடந்த 2019ஆம் ஆண்டு வரை உலகின் நான்காவது பெரிய ராணுவ பட்ஜெட் இடும் நாடாக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பட்ஜெட் இடும் நாடாக மாறியது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டிலும் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பட்ஜெட் இடும் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது முதல் இரண்டு இடங்களிலும் முறையே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

2021ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது இது 2020 ஆம் ஆண்டை விட 0.9 சதவிகிதமும் 2012ஆம் ஆண்டை விட 12 சதவிகிதமும் அதிகம் எனவும் சீனா பாகிஸ்தான் உடனான பிரச்சினைகள் மற்றும் ராணுவ நவீனமயமாக்கல் திட்டங்கள் ஆகியவை காரணமாக தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

அமெரிக்கா, சீனா, இந்தியா இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகியவை தான் இந்த பட்டியலில் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன, உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவில் சுமார் 62 சதவிகிதம் இந்த ஐந்து நாடுகளுக்கும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தயவுகள் அனைத்தும் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரை தளமாக கொண்டு இயங்கும் SIPRI – Stockholm International Peace Research Institute அதாவது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கைகளில் உள்ளவை என்பது கூடுதல் தகவல் ஆகும்.