ஹஃபீஸ் சயீத் மகனை பயங்கரவாதியாக அறிவித்த இந்தியா !!

  • Tamil Defense
  • April 10, 2022
  • Comments Off on ஹஃபீஸ் சயீத் மகனை பயங்கரவாதியாக அறிவித்த இந்தியா !!

மும்பை தாக்குதலின் சூத்தரிதாரியும், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தாய் அமைப்பான ஐமாத் உத் தாவாவின் தலைவனுமான ஹபீஸ் சயீத்திற்கு சமீபத்தில் பாக் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.

இந்த நிலையில் தற்போது அவனது மகன் தல்ஹா சயீத்தை இந்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத செயல்கள் தடை சட்டம் 1967ன் கீழ் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

ஹஃபீஸ் தல்ஹா சயீத் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவனாவான் மேலும் அந்த இயக்கத்தின் தலைமை மதகுருவாகவும் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவன் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவது, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, தாக்குதல்களை திட்டமிடுவது மற்றும் ஒருங்கிணைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.