சமீபத்தில் அமெரிக்கா ரஷ்ய உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா மேற்கத்திய ஆதரவு நிலைபாட்டை எடுக்காத காரணத்தால் அமெரிக்கா இந்தியாவுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தது.
அதாவது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு. ஆந்தணி ப்ளிங்கென் இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தங்களுக்கு கவலை அளிப்பதாக மறைமுக மிரட்டலை அமெரிக்கா சார்பில் விடுத்தார்.
அதற்கு பதிலடியாக அமெரிக்காவிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் “அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை உள்ளது அந்த வகையில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது” என பதிலடி கொடுத்துள்ளார்.
முதல் முறையாக அமெரிக்காவுக்கு இந்தியா அதுவும் வெளியுறவு அமைச்சர் மூலமாக அமெரிக்காவே எதிர்பார்க்காத இத்தகைய பதிலடி கொடுத்துள்ளதாக புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.