1 min read
சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை ரத்து செய்த இந்தியா !!
கொரோனா பெருந்தொற்றை அடுத்து சீனாவில் உயர்கல்வி பயின்று வந்த 22,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் தற்போது இவர்கள் மீண்டும் நேரடி வகுப்புகளில் பங்கு பெற விரும்பும் நிலையில் சீன அரசு மறுத்து வருகிறது.
சீனாவுக்குள் இந்திய மாணவர்களை அனுமதிக்காத காரணத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பூட்டான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.