வரலாற்று சாதனை படைக்க உள்ள புதிய இந்திய தரைப்படை தளபதி !!

  • Tamil Defense
  • April 19, 2022
  • Comments Off on வரலாற்று சாதனை படைக்க உள்ள புதிய இந்திய தரைப்படை தளபதி !!

இந்திய தரைப்படையின் 28ஆவது தலைமை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் இந்திய தரைப்படையின் தலைமை தளபதியாகும் முதலாவது பொறியியல் படைப்பிரிவு அதிகாரி எனும் வரலாற்று சாதனையை படைக்க உள்ளார்.

வருகிற 30ஆம் தேதி பதவி ஏற்க உள்ள இவர், 1982ஆம் ஆண்டு இந்திய தரைப்படையின் பாம்பே சாப்பர்ஸ் படைப்பரிவில் இணைந்து தனது தேச சேவையை துவக்கினார்.

இவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு படையில் எத்தியோப்பியா மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளில் பணியாற்றி உள்ளார் இது தவிர பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் 117ஆவது பொறியியல் ரெஜிமென்ட்டை வழிநடத்தி உள்ளார்.

இது தவிர சீன எல்லையில் 8ஆவது மலையக போர் டிவிஷனை வழிநடத்தி உள்ளார், ராணுவ நடவடிக்கைகள் இயக்குனரகத்தில் துணை இயக்குனர் ஜெனரலாக பணியாற்றி உள்ளார், சீன எல்லைக்கு பொறுப்பான மிக முக்கியமான 4ஆவது கோரின் தளபதியாகவும்,

தென்னக தரைப்படை தளபதியாகவும், அந்தமான் நிகோபார் முப்படை கட்டளையகத்தின் தளபதியாகவும், கிழக்கு தரைப்படையின் தளபதியாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இங்கிலாந்தின் காம்பர்லியில் உள்ள STAFF COLLEGE, மத்திய பிரதேச மாநிலத்தின் மோவ் நகரில் உள்ள ARMY WAR COLLEGE, தலைநகர் தில்லியில் உள்ள NATIONAL DEFENCE COLLEGE ஆகியவற்றில் பயின்று தேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.