இந்தியா இஸ்ரேல் இடையே வானூர்தி தயாரிப்பில் புதிய ஒப்பந்தம் !!
1 min read

இந்தியா இஸ்ரேல் இடையே வானூர்தி தயாரிப்பில் புதிய ஒப்பந்தம் !!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆகியை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளன.

அதாவது இந்த ஒப்பந்தம் மூலமாக சிவிலியன் போக்குவரத்து விமானங்களை டேங்கர் போக்குவரத்து ரக விமானங்களாக மாற்றியமைப்பது தான் அதன் சாராம்சம் ஆகும்.

இதனால் இந்திய விமானப்படை சற்றே பழைய சிவிலியன் போக்குவரத்து விமானங்களை வாங்கி அல்லது கையகபடுத்தி டேங்கர் விமானங்களாக மாற்றி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 6 ஐஎல்78 ரக ரஷ்ய தயாரிப்பு விமானங்கள் 60% இயங்கும் திறனுடன் இயங்கி வருவதால் இந்திய விமானப்படை புதிய டேங்கர்கள் வாங்க அதிக தீவிரமாக செயலாற்றி வருவது கூடுதல் தகவல் ஆகும்.