2023 ஆம் ஆண்டு வெளிவரும் சுதேசி இலகுரக டாங்கி !!

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட மூன்றாவது இறக்குமதிக்கு தடை பட்டியலில் இலகுரக டாங்கியும் (Light Tank) சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தடை பட்டியல் இந்த ஆண்டு டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் 2027ஆம் ஆண்டு டிசம்பர் வரை இது அமலில் இருக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இது இலகுரக டாங்கி தயாரிப்பி பணிகளில் ஈடுபட்டுள்ள லார்சன் அன்ட் டூப்ரோ (Larsen & Tubro) நிறுவனத்திற்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

குஜராத்தின் ஹசீராவில் உள்ள LARSEN & TOUBRO நிறுவனத்தின் Armoured Systems Centre – கவசவாகன தொழில்நுட்ப மையத்தில் 30-35 டன்கள் எடை கொண்ட இலகுரக டாங்கியை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கான என்ஜினாக ஜெர்மனியின் MTU Friedrichshafen GmbH நிறுவனம் தயாரிக்கும் MTU MT881 Ka-500 V8 ரக டீசல் என்ஜினை இந்திய இலகுரக டாங்கியில் பயன்படுத்த தேர்வு செய்துள்ளனர்.

-46℃ வரையிலான காலநிலையிலும் இயங்கும் திறன் கொண்ட இந்த என்ஜின் தான் நாம் பயன்படுத்தி வரும் Hanwha defense மற்றும் Larsen & Toubro கூட்டு தயாரிப்பான K9 VAJRA SPH தானியங்கி பிரங்கியிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.