3 அகஸ்டா வெஸ்ட்லான்ட (AUGUSTA WESTLAND) ஹெலிகாப்டர்களை திரும்ப ஒப்படைக்கும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on 3 அகஸ்டா வெஸ்ட்லான்ட (AUGUSTA WESTLAND) ஹெலிகாப்டர்களை திரும்ப ஒப்படைக்கும் இந்திய விமானப்படை !!

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக தில்லி அருகேயுள்ள பாலம் விமானப்படை தளத்தில் மூன்று AUGUSTA WESYLAND – 101 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தபடாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இவை சுமார் 3,600 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விமானப்படையின் விஐபி போக்குவரத்து பிரிவிற்காக வாங்கப்பட இருந்த 12 ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதியாகும் ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப்படையில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு பெற்று கொள்ளப்பட்ட மூன்று ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இவற்றை தயாரிக்கும் லியனார்டோ LEONARDO S.p.A நிறுவனமும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தற்போது இந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று ஹெலிகாப்டர்களை அவற்றின் உரிமையாளரான LEONARDO S.p.A நிறுவனத்திடமே ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய விமானப்படை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இது பற்றிய கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சகம் இதனை பரிசீலித்து கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.