அதிநவீன இலகுரக வானூர்தியின் தாக்கும் ரகத்தின் செயல்பாடுகளில் திருப்தி கொண்ட விமானப்படை தற்போது மேலதிக வானூர்திகளை வாங்க முடிவு செய்துள்ளது.இந்த புதிய வானூர்திகளை உயர் இமாயலப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளது.
ALH Mark-IV எனவும் ருத்ரா எனவும் அழைக்கப்படும் இந்த வானூர்தியை சீனா உடனான மோதல் சமயங்களில் லடாக் பகுதியில் அதிக முறை உபயோகித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது மூன்று ஸ்குவாட்ரான் வகை படையில் இணைக்க விமானப்படை திட்டமிட்டு வருகிறது.மேலும் இந்திய இராணுவமும் இந்த ரக வானூர்தியை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
சப் செக்டார் நார்த் பகுதிகளில் வானூர்தி தரையிறக்கும் இடங்கள் 15000 அடிக்கும் உயரம் இருக்கும்.அது போன்ற இடங்களிலும் ருத்ரா நன்கு செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த வானூர்தியில் 20 mm turret gun, 70 mm rocket pods மற்றும் வான்-வான் ஏவுகணை கள் உள்ளன.மேலும் இந்த வானூர்தியில் உள்நாட்டுத் தயாரிப்பு ஹெலினா ஏவுகணையும் இணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.