தேஜாஸ் மார்க்-1ஏ வின் உடல் கட்டமைப்பு சோதனைகள் ஆரம்பம் !!
1 min read

தேஜாஸ் மார்க்-1ஏ வின் உடல் கட்டமைப்பு சோதனைகள் ஆரம்பம் !!

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது ARDC – வானூர்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள Ground Testing Centreல் தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்தின் சோதனைகளை துவங்கி உள்ளது.

அதாவது MAFT – MAIN AIRFRAME FATIGUE TEST எனப்படும் உடல் கட்டமைப்பு சார்ந்த சோதனைகள் துவங்கியுள்ளதாக இவை 8 முதல் 9 ஆண்டுகள் வரை நடைபெறும் எனவும்

ராணுவ தர சான்றிதழ் பெறுவதற்கு ஒரு போர் விமானத்தின் உடல் அதன் ஆயுளை விடவும் நான்கு மடங்கு அதிகமாக இந்த சோதனைகளை தாக்குபிடித்து நிலைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் HAL மற்றும் வானூர்தி மேம்பாட்டு முகமை ADA ஆகியவற்றை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் CEMILAC எனப்படும் ராணுவ வானூர்தி தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகளை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.