பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி என்ஜின் சப்ளை செய்ய ஜெர்மனி மறுப்பு !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி என்ஜின் சப்ளை செய்ய ஜெர்மனி மறுப்பு !!

பாகிஸ்தான் கடற்படையின் ஹங்கோர் ரக நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவின் டைப்-039பி ரக நீர்மூழ்கி கப்பல்களை அடிப்படையாக கொண்டு இருநாடுகளாலும் கூட்டாக கட்டப்பட்டு வருகிறது.

இந்த வகை டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்கான என்ஜினுக்காக பாகிஸ்தான் ஜெர்மனியின் உதவியை நாடி MTU12V396 ரக டீசல் என்ஜின்களை சப்ளை செய்யுமாறு கேட்டு கொண்டது.

ஆனால் 1989 தியானன்மென் சதுக்க படுகொலைகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதம் மற்றும் ராணுவ தளவாடங்களை சப்ளை செய்ய விதித்த தடையால்,

ஜெர்மனி இந்த என்ஜின்களை சப்ளை செய்ய மறுத்துள்ளது இதனை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா உறுதிபடுத்திய நிலையில் சீனா தான் காப்பி அடித்து தயாரித்த என்ஜின்களை தர முன்வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பாகிஸ்தான் கடற்படை சீன தயாரிப்பு என்ஜின்களை வாங்குமா எனும் கேள்விக்கு இரு தரப்பும் எவ்வித பதிலோ சமிக்ஞையோ வெளிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹங்கோர் ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள் கப்பல்கள் பாபர் ரக அணு ஆயுத க்ரூஸ் ஏவுகணைகளை சுமக்கும் என்பதும் இது இந்தியாவுக்கு சற்றே கவலையளிக்கும் விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.