உக்ரைன் அதிபரின் விமர்சனத்தை நிராகரித்த ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் !!
1 min read

உக்ரைன் அதிபரின் விமர்சனத்தை நிராகரித்த ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் !!

சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி 2008ஆம் ஆண்டு அன்றைய ஜெர்மன் வேந்தராக இருந்த ஏஞ்சலா மெர்கல்,

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய இருந்த நேரத்தில் அதை முடக்கினார் என்றும் இது மிகப்பெரிய பிழை தவறான புரிதல் எனவும் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஏஞ்சலா மெர்கல் அன்றைக்கு எடுக்கப்பட்ட அந்த முடிவு மிகவும் சரியானது என்றும் எந்த அரசியல் நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாத காரணத்தால் தான் அந்த முயற்சி முடக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதே நேரத்தில் சர்வதேச சமுகம் நிச்சயமாக உக்ரைனுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்பதோடு மட்டுமின்றி அனைத்து வகையான உதவிகளையும் உக்ரைன் பெற உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.