நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தில் இருந்து ஃபிரான்ஸ் விலகும் -அதிபர் வேட்பாளர் !!
ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் லா பென் தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தில் இருந்து ஃபிரான்ஸ் விலகும் என கூறியுள்ளார்.
அதாவது நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தின் கீழ் ஃபிரான்ஸ் ராணுவம் இயங்காது ஆனால் நேட்டோ உறுப்பு நாடாக இருக்கும் ஆகவே நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஃபிரான்ஸ் நேட்டோவின் கீழ் பதிலடி கொடுக்கும் எனபதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.
இது கடந்த 1966ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் ராணுவத்தின் தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் சால்ஸ் டி கால் ஃபிரான்ஸ் படைகளை நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தின் கீழ் இருந்து விலக்கியதை போன்ற நிலைபாடாக பாரக்கப்படுகிறது பின்னர் 2009ல் தான் மீண்டும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் அமெரிக்கா தலைமையிலான பல நாடுகளின் கூட்டணியை கடுமையாக எதிர்க்கிறார் உக்ரைன் ரஷ்ய போரில் ஃபிரான்ஸ் எவ்வித ஈடுபாடும் இன்றி இருப்பதையே அவர் விரும்புகிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சொல்லப்போனால் ஃபிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் அல்லது ரஷ்ய ஆதரவு நிலைபாடோ இன்றி இந்தியா போன்ற தனித்து நடுநிலையான பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஆகவே லா பென் ஃபிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.