இந்திய கடற்படைக்கு பழைய ரஃபேல் விமானங்களை விற்க தீவிரம் காட்டும் ஃபிரான்ஸ் !!

  • Tamil Defense
  • April 29, 2022
  • Comments Off on இந்திய கடற்படைக்கு பழைய ரஃபேல் விமானங்களை விற்க தீவிரம் காட்டும் ஃபிரான்ஸ் !!

புதன்கிழமை அன்று ஃபிரெஞ்சு பத்திரிக்கையான லா ட்ரீபியூன் “La Tribune” கடந்த சில மாதங்களாகவே ஃபிரான்ஸ் அரசு இந்திய கடற்படைக்கு பயன்படுத்தப்பட்ட RAFALE M (M – MARINE) கடற்படைக்கான ரஃபேல் போர் விமானங்களை விற்க முனைகிறது.

இந்திய கடற்படைக்கு சுமார் 57 போர் விமானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை கைப்பற்ற ஃபிரான்ஸின் DASSAULT மற்றும் அமெரிக்காவின் BOEING ஆகிய நிறுவனங்கள் கடுமையாக முயன்று வருகின்றன.

அந்த வகையில் ஃபிரான்ஸ் ரஃபேல் போர் விமானங்களிலேயே அதிநவீனமான RAFALE F3R ரக கடற்படை போர் விமானங்களை இந்திய கடற்படைக்கு விற்க முயன்று வருகிறது.

BOEING F/A – 18 SUPER HORNET போர் விமானத்தை விடவும் அளவில் சிறியதான RAFALE-M F3R விமானங்கள் அளவில் சிறியவை ஆகவே ஆகஸ்டு மாதம் படையில் இணைய உள்ள விக்ராந்த் போர் கப்பலில் இருந்து இயங்க தகுந்தவை எனவும்

உடனடியாக விக்ராந்தில் இருந்து பயன்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 4 RAFALE-M F3R விமானங்களை அளிக்க உள்ளதாகவும் விமானப்படை RAFALEகளை போலவே METEOR ஏவுகணைகள் மற்றும் TALIOS இலக்கு அடையாளம் காணும் கருவி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.