விரைவில் நேட்டோவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் சுவீடன் !!

  • Tamil Defense
  • April 12, 2022
  • Comments Off on விரைவில் நேட்டோவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் சுவீடன் !!

ரஷ்யா உக்ரைன் மேல் தொடுத்துள்ள போரின் மூலமாக மிகப்பெரிய தவறை செய்துள்ளதாகவும் இதன் காரணமாக நேட்டோ விரிவடையும் என கூறப்படுகிறது.

இதுவரை நேட்டோவில் இணையாமல் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஃபின்லாந்து மற்றும் சுவீடன் ஆகியவை நேட்டோ கூட்டமைப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரஷ்யா இரண்டு நாடுகளுக்கும் நேட்டோவில் இணைய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, இத்தகைய நடவடிக்கைகள் மோதல்களை அதிகரிக்கும் என ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.