மரியூபோல் நகரில் மனிதாபிமான பாதையை திறப்பதாக ரஷ்யா அறிவிப்பு !!

  • Tamil Defense
  • April 1, 2022
  • Comments Off on மரியூபோல் நகரில் மனிதாபிமான பாதையை திறப்பதாக ரஷ்யா அறிவிப்பு !!

மரியூபோல் நகரில் உக்ரைன் படைகளுடனான சண்டையை தற்காலிகமாக நேற்று நிறுத்தி மனிதாபிமான பாதையை திறப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதாவது மரியூபோல் நகரில் இருந்து ஸாப்ரோஸியா நகரம் வரை ரஷ்யா கட்டுபாட்டில் உள்ள பெர்டியான்ஸ்க் துறைமுகம் வழியாக இந்த பாதை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு உக்ரைன் முழு ஒத்துழைப்பு மற்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் வழியாக கோரிக்கை விடுத்துள்ளது.