ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு மற்றும் நட்பு நாடுகள் நாடுகள் கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 120 ரஷ்ய தூதர்களை தங்களது நாடுகளை விட்டு வெளியேற்றி உள்ளன.
சமீபத்தில்இந்த வரிசையில் இத்தாலி டென்மார்க் சுவீடன் ஆகிய நாடுகள் இணைந்து உள்ளன, உக்ரைனில் பூகா நகரத்தில் ரஷ்ய படைகளின் கொலைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மட்டுமின்றி இவை அனைத்தும் உக்ரைனால் ஏற்பாடு செய்யப்பட்டது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ரூஷ்கோ பேசும்போது இவை அனைத்தும் ரஷ்யாவை குறிவைத்து நடத்தப்படும் நிகழ்வுகள் இவற்றிற்கான பதிலடிகள் நிச்சயமாக கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.