அதிக தொலைவு செல்லும் பினாகா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதனை !!

  • Tamil Defense
  • April 10, 2022
  • Comments Off on அதிக தொலைவு செல்லும் பினாகா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதனை !!

மேம்படுத்தபட்ட அதிக தொலைவுக்கு பாயும் பினாகா மார்க்-1 ரக ராக்கெட்டுகள் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

பினாகா EPRS – Enhanced Pinaka Rocket System அதாவது மேம்படுத்தப்ட்ட பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் பினாகா ADM – Area Denial Munition அதாவது மிகபரந்த பகுதியை தாக்கும் ராக்கெட் என இரு வடிவங்கள் சோதனை செய்யப்பட்டன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய தரைப்படை ஆகியவை கூட்டாக இணைந்து ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்த சோதனைகளை மேற்கொண்டன.

அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததோடு மட்டுமின்றி மிகவும் துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் இந்திய தரைப்படை மற்றும் DRDO ஆகியவை அறிவித்துள்ளன.