ஆம்காவில் Electronic Mission Pilot தொழில்நுட்பம் !!
1 min read

ஆம்காவில் Electronic Mission Pilot தொழில்நுட்பம் !!

ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்தில் பணியாற்றி வரும் ஏவியானிக்ஸ் பொறியாளரான நவ்ஷாத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அதாவது ஆம்கா விமானத்தில் மின்னனு விமானி தொழில்நுட்பம் இருக்கும் என்றார் இந்த Electronic Mission Pilot தொழில்நுட்பம் போர் விமானத்தை இயக்கும் விமானிக்கு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.

பொதுவாக Mission Pilot எனும் பதம் போர் விமானத்தின் தலைமை விமானியை குறிக்கும் சொல்பதம் ஆகும், ஆம்கா போர் விமானத்தில் இந்த மின்னனு விமானி அமைப்பு அந்தளவுக்கு திறன் கொண்டதாக இருக்குமா என்பது பற்றிய தகவல் இல்லை.

ஆனால் இது விமானத்தை இயக்கும் விமானிக்கு தொடர்ந்து பல்வேறு கள நிலவரம் மற்றும் சூழல்களுக்கு ஏற்ற ஆலோசனைகளை தொடர்ச்சியாக வழங்கி கொண்டே இருக்கும் என்பது மட்டும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மின்னனு விமானி அமைப்பின் ஆலோசனைகள் காரணமாக ஆம்கா விமானத்தின் விமானி தரை கட்டுபாட்டு மையத்தின் உதவியின்றி பறக்கவும் சண்டையிடவும் தாக்குதல் நடத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மாக் 2.15 வேகத்தில் செல்லும் ஆம்கா போர் விமானம் உலகின் மிக வேகமான ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என்ற சிறப்புக்கு உரித்தானதாக இருக்கும் என்றால் மிகையல்ல.

ஆம்கா மார்க்-2 போர் விமானத்தில் ATOL – Automated Takeoff & Landing எனப்படும் தானியங்கி முறையில் மேலேழும்பும் மற்றும் தரையிறங்கும் திறன், தானியங்கி முறையில் வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதி Auto AAR- Auto Air to Air Refuelling, சுய சிந்தனை திறன் AI – Artificial intelligence போன்ற திறன்களை பெறும் எனவும் நவ்ஷாத் கூறினார்.