நான் செய்தது போல உங்கள் வாழக்கையை நாசமாக்கி கொள்ளாதீர்- முன்னாள் காஷ்மீர் பயங்கரவாதி !!

  • Tamil Defense
  • April 30, 2022
  • Comments Off on நான் செய்தது போல உங்கள் வாழக்கையை நாசமாக்கி கொள்ளாதீர்- முன்னாள் காஷ்மீர் பயங்கரவாதி !!

காஷ்மீரை சேர்ந்த 35 வயதான முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஷேக் முதாசீர் தற்போது இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணையாமல் இருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்.

இவர் 2006ஆம் ஆண்டு பன்னிரென்டாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த சமயத்தில் தான் கல்வியை உதறிவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார் பின்னர் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த குற்றங்களுக்காக 2007, 2008 மற்றும் 2010 என மூன்று முறை சிறைவாசம் அனுபவித்து உள்ளார் அப்போது தான் இந்திய காவல்பணி அதிகாரி ரஜ்னி சேகல் எனும் ஜெயிலர் பயங்கரவாதத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தினார்.

சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் ஹூரியத் மாநாட்டு தலைவர்கள் சொகுசாக வாழ்வதாகவும் உங்களை போன்ற அடிமட்ட நபர்களை அவர்கள் பகடை காய்களாக பயன்படுத்தி கொள்கின்றனர் என்ற உண்மையையும் விளக்கினார் சிறைக்குள் இருந்த போது நானே அவர்கள் சொகுசாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன் என்கிறார் முதாசீர்.

பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த போது எனக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது, குடும்பத்தின் மூத்த மகனாக ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் தேவைகள் மற்றும் எனது மருத்துவ செலவுகளை சந்திக்க திணறினேன், ஆகவே ஹூரியத் தலைவர்களிடம் உதவி கேட்டேன்.

முதல்முறை சென்ற போது அலி ஷா கிலானி மற்றும் மிர்வாயிஸ் உமர் ஃபரூக் ஆகியோர் தலா 2000 ரூபாய் தந்துவிட்டு எனக்கு நிச்சயமாக உதவி செய்வதாக கூறிவிட்டு எனது மருத்துவ ஆவணங்களை வாங்கி வைத்து கொண்டனர் ஆனால் இன்று வரை உதவி வரவேயில்லை இதையடுத்து மீண்டும் சென்ற போது காவலாளி என்னை விரட்டி விட்டார்.

இதன்பிறகு தான் மதராச்சகளுக்கு சென்று குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் அறிவுரை வழங்க தொடங்கினேன் லஷ்கர் இ தொய்பா என்னை கொல்ல விரும்புகின்றனர் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்கிறார் ஷேக் முதாசீர்.