சமீபத்தில் நமது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணையம் ஆகியவை பாகிஸ்தானில் வழங்கப்படும் உயர்கல்வி படிப்புகள் இந்தியாவில் செல்லுபடியாகாது என கூட்டாக அறிவித்தன.
மேலும் இந்திய குடிமக்கள் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கு உயர் கல்வி கற்றோருக்கு இந்தியாவில் வேலைகளுக்கோ அல்லது மேல் படிப்பு பயிலவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சக அலுவலகம் இந்த அறிவிப்பிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதற்கு பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது ஆகவே இதற்கு இந்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் அதே நேரத்தில் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மீதான வன்மத்தை காட்டுவதாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளது.