லடாக்கில் மின்சார நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் -தோல்வியுற்ற சீனா !!
1 min read

லடாக்கில் மின்சார நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் -தோல்வியுற்ற சீனா !!

கடந்த 8 மாதங்களாக லடாக்கில் உள்ள மின்சார விநியோக நிலையங்கள் மீது சீன அரசு ஆதரவு கொண்ட ஹேக்கர்கள் அவ்வப்போது சைபர் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர்.

அதாவது லடாக் எல்லைக்கு அருகே வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள இத்தகைய ஏழு SLDC மையங்கள் மீது இந்த தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மூதல் இந்த ஆண்டு மார்ச் வரை இந்த தாக்குதல்கள் நடைபெற்று உள்ளன, இது தவிர மற்றுமொரு இந்திய நிறுவனமும் இவர்களின் தாக்குதலை சந்தித்து உள்ளது.

மத்திய மின்சார துறை மற்றும் எதிர்கால எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் பேசும்போது இந்த தாக்குதல்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனை அதிகபடுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எது எப்படியோ இரு நாடுகளின் எல்லையோர பகுதிகளில் நீடித்து வந்த பிரச்சினை தற்போது மற்றொரு பரிமாணத்தை நோக்கி மிகப்பெரிய அடி எடுத்து வைத்துள்ளது என்றால் மிகையல்ல.