10000 திருச்சி அஸ்ஸால்ட் ரைபிள்களை வாங்கும் CRPF !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on 10000 திருச்சி அஸ்ஸால்ட் ரைபிள்களை வாங்கும் CRPF !!

மத்திய ரிசர்வ் காவல்படை சுமார் 10,000 TAR என அழைக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த வருடம் ஃபெப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் காவல்படை இந்த வகை துப்பாக்கிகளுடன் சேர்த்து கட்டக் அசால்ட் ரைபிள்களையும் படையில் இணைத்தது குறிப்பிடத்தக்கது.

இது நாள் வரை துணை ராணுவ படைகளான BSF, CISF, ITBP மற்றும் SSB ஆகியவற்றிற்கு சுமார் 10,000 TAR துப்பாக்கிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன, இந்த தொடர் ஆர்டர்கள் இந்த துப்பாக்கியின் சிறப்பை உணர்த்தும் வகையில் உள்ளது என்றால் மிகையாகாது.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே திருச்சி ஆயுத தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கி தற்போது பல்வேறு மாநில காவல்படைகளாலும் விரும்பப்படுகிறது.

அந்த வகையில் கேரள காவல்துறை இந்த TAR துப்பாக்கியின் கார்பைன் ரகமான TriCa துப்பாக்கிகளில் 92 துப்பாக்கிகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.