தளவாடங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் பரிசு தொகை அறிவிப்பு !!

  • Tamil Defense
  • April 5, 2022
  • Comments Off on தளவாடங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் பரிசு தொகை அறிவிப்பு !!

உக்ரைன் பாராளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது அதாவது தளவாடங்களை ஒப்படைத்து சரணடையும் ரஷ்ய வீரர்களுக்கு பரிசு தொகை வழங்குவது தான் அது.

அந்த வகையில் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாங்கி அல்லது பிரங்கி ஒன்றுக்கு 1 லட்சம் டாலர்களும், ஹெலிகாப்டருக்கு 5 லட்சம் டாலர்களும் போர் விமானம் கொண்டு வந்தால் 10 லட்சம் டாலர்கள், உதவி கலன்களுக்கு 2 லட்சம் டாலர்கள் எனவும்

ராணுவ லாரிகளுக்கு 10ஆயிரம் டாலர்கள், கவச வாகனங்களுக்கு 50ஆயிரம் டாலர்களும், சிறிய படகுகளுக்கு 20 ஆயிரம் டாலர்களும் வரையும் அறிவிக்கப்பட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.