1 min read
இந்தியாவில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள் !!
நேற்று மஹராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் இரவில் தீடிரென வானில் விண்கற்கள் பாய்வதை போன்ற காட்சி தென்பட்டு மக்களை பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
பின்னர் தான் அது கடந்த 2021ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் சீனா ஏவிய LONG MARCH 3B எனும் ராக்கெட்டின் முதலாவது நிலை என்பது தெரிய வந்தது.
இந்த ராக்கெட்டின் முதலாவது நிலை விண்ணில் தங்கியிருந்த நிலையில் படிப்படியாக தாழ்ந்து பூமியின் வழிமண்டலத்திற்குள் நுழைந்தது, அதிக வெப்பம் காரணமாக எரிய தொடங்கிய நிலையில் மக்கள் இதனை கண்டுள்ளனர்.
இந்த பாகங்கள் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தரையில் விழுந்தன இதை தொடர்ந்து வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.