தடுமாறும் சீனாவின் மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் கட்டுமான பணிகள் !!

  • Tamil Defense
  • April 20, 2022
  • Comments Off on தடுமாறும் சீனாவின் மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் கட்டுமான பணிகள் !!

சீன கடற்படைக்காக மூன்றாவதாக ஒரு விமானந்தாங்கி கப்பல் ஷாங்காய் நகரின் அருகேயுள்ள சாங்ஷிங் தீவில் அமைந்துள்ள ஜியாங்னான் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கட்டுமான பணிகள் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளன அதாவது கொரோனா ஊரடங்கு காரணமாக முக்கிய பாகங்களின் சப்ளை தடைபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 23ஆம் தேதி சீன கடற்படையின் 73ஆவது ஆண்டு விழா வருகிறது அந்த கொண்டாட்டங்களை ஒட்டி இந்த விமானந்தாங்கி கப்பலை கடலில் இறக்க முடிவு செய்யப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன ஆனால் இதில் இரண்டு லிஃப்ட் அமைப்புகள் வர காலதாமதம் ஆவதால் இணைக்க முடியவில்லை அத்துடன் கொரோனா ஊரடங்கு மற்றும் பாதிப்பு காரணமாக போதிய பணியாளர்களும் பணிக்கு வர முடியாத சூழல் நிலவுகிறது.

ஆகவே இந்த விமானந்தாங்கி கப்பலை தகுந்த நேரத்தில் கடலில் இறக்க முடியாத நிலை உள்ளது அத்துடன் சீன கடற்படையின் இரண்டு சப்ளை கப்பல்களை கட்டும் ஒப்பந்தமும் கைவசம் உள்ளது ஆனால் விமானந்தாங்கி கப்பல் கடலில் இறக்கப்பட்டால் தான் அந்த தளத்தை மற்ற இரண்டு கப்பல்களின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தி கொள்ள முடியும் ஆகவே அவற்றின் கட்டுமானமும் காலதாமதம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்குறிப்பிட்ட விமானந்தாங்கி கப்பலுக்கு வடக்கு முதல் கிழக்கு வரையிலான கடலோர மாகாணங்களின் பெயர்கள் அடிப்படையில் ஜியாங்ஸூ என பெயர் சூட்டப்படலாம் என்பது கூடுதல் தகவல் ஆகும்