சீன விமானப்படையின் திட்டம்; விழிப்படையும் அமெரிக்க விமானப்படை !!

  • Tamil Defense
  • April 28, 2022
  • Comments Off on சீன விமானப்படையின் திட்டம்; விழிப்படையும் அமெரிக்க விமானப்படை !!

சீன விமானப்படை விரைவில் இரண்டு முற்றிலும் புதிய வகையான குண்டுவீச்சு போர் விமானங்களை உருவாக்கி வருகிறது இது அமெரிக்க விமானப்படையை விழிப்படைய செய்துள்ளது.

ஏற்கனவே சீனா J-20 மற்றும் FC-31 ஆகிய இரண்டு ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரித்து இன்று படையில் இணைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளது, அதற்கு சீன தொழில் பலம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது JH-XX எனும் குண்டு வீச்சு போர்விமானத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது இது ஒரு SUPERSONIC STEALTH FIGHTER BOMBER விமானமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன உருவத்தில் அமெரிக்க F-22 RAPTOR விமானத்தை போல் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த விமானம் தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் எனவும், இதனை விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்தும் கூட பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏற்கனவே சீன விமானப்படையின் பயன்பாட்டில் உள்ள H-20 குண்டுவீச்சு விமானத்தை போல அதிக தொலைவு பறக்காது ஆனால் அதற்கு பதிலாக அதிக ஆயுதங்களை சுமந்து கொண்டு குறைந்த தூரம் பறக்கும் ஆற்றல் பெற்றிருக்கும் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது குண்டுவீச்சு விமானம் மேற்குறிப்பிட்ட XIAN H-20 என்பதாகும், இதை பற்றிய முதல் தகவல்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி சீன அரசால் வெளியிடப்பட்டது.

இந்த விமானத்தில் இரண்டு Adjustable Tail Wings, விமானத்தின் முன்பகுதியில் Airborne Radar மற்றும் இரண்டு Stealth Air Intakes ஆகியவை காணப்படும் எனவும்

இந்த விமானம் 45,000 கிலோ அளவிலான ஆயுதங்களை சப்சானிக் வேகத்தில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் எனவும் 4 Hypersonic Stealth Cruise missiles அல்லது Nuclear (அணுஆயுத ஏவுகணைகள்) அல்லது Conventional missiles வழக்கமான ஏவுகணைகள் ஆகியவற்றை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட JH-XX ரக குண்டுவீச்சு விமானத்தை போலின்றி இந்த விமானத்தின் வடிவமைப்பாளர்கள் வேகத்திற்கு பதிலாக தொலை தூர பயணம் மற்றும் முழு ஸ்டெல்த் அம்சங்களுக்கு தான் அதிக முன்னுரிமை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக இந்த XIAN H-20 ரக விமானத்தால் ஜப்பான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் அதற்கு அருகேயுள்ள குவாம், ஆஸ்திரேலியா மற்றும் அதன் அண்டை நாடுகள் வரையிலான தொலைவு வரை சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றலை கொண்டிருக்கும் என்றால் மிகையாகாது.

இதன் காரணமாக அமெரிக்க விமானப்படை சற்றே விழிப்படைந்து உள்ளது அமெரிக்காவின் NORTHROP GRUMMAN நிறுவனம் தயாரிக்கும் B-21 RAIDER ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானத்தின் தயாரிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிகிறது.

ஏற்கனவே அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள B2 SPIRIT BOMBER ரக குண்டுவீச்சு விமானத்தின் தோற்றத்தை ஒத்திருக்கும் இது அளவில் சற்றே சிறியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.