செர்பியாவுக்கு ரகசியமாக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை டெலிவரி செய்த சீனா !!

  • Tamil Defense
  • April 12, 2022
  • Comments Off on செர்பியாவுக்கு ரகசியமாக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை டெலிவரி செய்த சீனா !!

சீனா செர்பியாவிற்கு ரகசியமாக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை டெலிவரி செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் மூலமாக இந்த ஏவுகணைகள் செர்பிய தலைநகர் பெல்கிரேட் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் செர்பிய அரசாங்கம் இதற்கு எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை, முன்னமே செர்பியா சீனாவிடம் இருந்து தாக்குதல் ட்ரோன்கள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

செர்பியா ரஷ்யாவை கண்டித்து வாக்களித்த அதே நேரத்தில் ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் திணிக்கும் தடைகளை விதிக்க மறுத்துவிட்டதும் கூடுதல் தகவல் ஆகும்.