எல்லையோரம் ட்ரோன் ஆபரேஷன்களை விரிவுபடுத்தும் சீனா !!

  • Tamil Defense
  • April 18, 2022
  • Comments Off on எல்லையோரம் ட்ரோன் ஆபரேஷன்களை விரிவுபடுத்தும் சீனா !!

இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் சீனா தனது ட்ரோன் ஆபரேஷன்களை விரிவுபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ISTAR – Intelligence, Surveillance, Target Acquisition & Reconnaissance எனப்படும் உளவு, கண்காணிப்பு, இலக்குகளை அடையாளம் காண்பது, களத்தை ஆய்வு செய்தல் போன்ற திறன்கள் வலுவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சீன மக்கள் விடுதலை ராணுவம் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருவதை அதிகரித்து கொண்டே வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கான ஆளில்லா வானூர்திகளின் நடவடிக்கைகள் அனைத்துமே சீன ராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தின் மூலமாக ஒருங்கிணைக்கப்படுவதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர சீன ராணுவம் வெளிநாட்டு இறக்குமதி செயற்கைகோள் தொலைதொடர்பு கருவிகளை ஒதுக்கி விட்டு அவர்களின் சொந்த டியாங்டாங் செயற்கைகோள் தொலைதொடர்பு அமைப்பை பயன்படுத்த தொடங்கி உள்ளனர் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லைகளில் இவை தென்பட்டுள்ளன.