திபத்திய மக்கள் அதிக உயர் மற்றும் அதிக குளிர்ந்த பிரதேசங்களில் சிறப்பாக செயல்படும் தன்மைகளை கொண்டுள்ள காரணத்தால் அவர்களை படைகளில் இணைக்க சீனா விரும்பியது.
அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து சீனா தனது ராணுவத்தில் திபெத்தியர்களை வலுக்கட்டாயமாக படைகளில் இணைத்து வருகிறது.
தற்போது திபெத் தலைநகர் லாசாவுக்கு அருகே 1000 திபெத் வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் தலைநகர் லாசாவில் 200 திபெத் வீரர்கள் உள்ளதாகவும்
இவர்கள் அணைவருக்கும் கொரில்லா சண்டை முறை, உயிர் பிழைத்தல் முறைகள், பாராசூட் மூலம் குதிப்பது, அதிநவீன ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை தவிர 11 மற்றும் 12 வகுப்பில் பயிலும் திபெத் மாணவர்களை மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கு கட்டாய சேவையில் இணைத்து வருகின்றனர்.
அதாவது சீன ராணுவத்தில் பணியாற்றினால் இலவசமாக உயர்கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படும் எனும் நிபந்தனையோடு திபெத் மாணவர்களை படையில் இணைத்து வருகின்றனர்.
அந்த வகையில் 120 திபெத் மாணவர்கள் ஷிங்கேய் ராணுவ மையத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் அங்கு சீன மற்றும் ஹிந்தி மொழி ஆகியவை கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெகு சிலரை தவிர பெருமளவிலான திபெத்தியர்கள் படைகளில் சேர மறுக்கும் நிலையில் வலுக்கட்டாயமாக அவர்களை சேர்க்க சீன அரசும் ராணுவமும் நடவடிக்கை எடுத்து வருவது கூடுதல் தகவல் ஆகும்.