1 min read
க்வான்டம் தொலைதொடர்பில் உலக சாதனை படைத்த சீனா !!
சீனா மிகவும் அதிநவீன தொலை தொடர்பு தொழில்நுட்பமான QUANTUM தொலை தொடர்பில் உலக சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது QSDC – QUANTUM SECURE DIRECT COMMUNICATION (பாதுகாக்கப்பட்ட நேரடி க்வான்டம் தகவல்தொடர்பு) அமைப்பின் மூலமாக சுமார் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு தகவல்கள் பரிமாறியதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த க்வான்டம் தொழில்நுட்பங்கள் மூலமாக வேகமாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும், இவற்றை இடைமறிக்கவோ அல்லது முடக்கவோ முடியாது ஆகவே ராணுவ தொலைதொடர்புக்கு பெரிய அளவில் உதவியாக அமையும்.
தற்போது உலகிலேயே சீனா தான் இந்த க்வான்டம் தொழில்நுட்பத்தில் தலைசிறந்து முன்னோடியாக விளங்குவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.